<!DOCTYPE HTML PUBLIC "-//W3C//DTD HTML 4.01 Transitional//EN"
"http://www.w3.org/TR/html4/loose.dtd">
<html DIR="LTR">
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8">
<link rel="icon" type="image/ico" href="/tools/dlpage/res/chrome/images/chrome-16.png"><title>Google Chrome சேவை விதிமுறைகள்</title>
<style>
body { font-family:Arial; font-size:13px; }
h2 { font-size:1em; margin-top:0 }
</style>
<script type="text/javascript">
function carry_tracking(obj) {
var s = '(\\?.*)';
var regex = new RegExp(s);
var results = regex.exec(window.location.href);
if (results != null) {
obj.href = obj.href + results[1];
} else {
s2 = 'intl/([^/]*)';
regex2 = new RegExp(s2);
results2 = regex2.exec(window.location.href);
if (results2 != null) {
obj.href = obj.href + '?hl=' + results2[1];
}
}
}
</script></head>
<body>
<h2>Google Chrome சேவை விதிமுறைகள்</h2>
<p>Google Chrome இன் இயங்கும் குறியீட்டு பதிப்பிற்கு இந்த சேவை விதிமுறைகள் பொருந்தும். http://code.google.com/chromium/terms.html இல் உள்ள ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் உரிம ஒப்பந்தங்களின் கீழ் கட்டணம் இன்றி, Google Chrome க்கான மூல குறியீடு கிடைக்கும்.</p>
<p><strong>1. Google உடனான உங்கள் உறவு</strong></p>
<p>1.1. நீங்கள் பயன்படுத்தும் Google இன் தயாரிப்புகள், மென்பொருட்கள், சேவைகள் மற்றும் வலைத்தளங்கள் (தனிப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தின் கீழ் உங்களுக்கு Google வழங்கியிருக்கும் சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் இந்த ஆவணத்தில் பொதுவாக “சேவைகள்” எனக் குறிப்பிடப்படும்) ஆகிய அனைத்தும், உங்களுக்கும் Google க்கும் இடையேயான சட்டப்பூர்வ ஒப்பந்தத்திற்கு உட்பட்டது. “Google” என்பது, Google Inc., நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம் நடைபெறும் முகவரி, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States. ஒப்பந்தம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதையும், அந்த ஒப்பந்தத்தின் சில விதிமுறைகளை அமைப்பது குறித்தும், இந்த ஆவணம் விளக்கும்.</p>
<p>1.2 Google உடன் எழுத்துபூர்வமாக உடன்பட்டால் தவிர, Google உடனான உங்கள் ஒப்பந்தம், இந்த ஆவணத்தில் அமைக்கப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் குறைந்தபட்சமாக உட்பட்டிருக்கும். இவை அனைத்தும் “சர்வதேச விதிமுறைகள்” என்ற பெயரில் கீழே குறிப்பிடப்படும். Google Chrome மூலக் குறியீட்டிற்கான ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் உரிமங்கள், எழுத்துபூர்வமான தனி ஒப்பந்தங்களாக உள்ளன. ஓபன் சோர்ஸ் மென்பொருள் உரிமங்கள், இந்த உலகளாவிய விதிமுறைகளை குறிப்பிட்ட வரம்புக்குள் மீறி அமையும்போது, அவை Google Chrome அல்லது Google Chrome இன் குறிப்பிட்ட உறுப்புகளின் பயன்பாட்டுக்கான, Google உடனான உங்கள் ஒப்பந்தத்தை அவை கட்டுப்படுத்தும்.</p>
<p>1.3 Google உடனான உங்கள் ஒப்பந்தத்தில் இந்த ஆவணத்திற்கான பிற்சேர்க்கை A வில் விவரிக்கப்பட்ட விதிமுறைகளும் மேலும் உலகளாவிய விதிமுறைகளுடன் சேவைகளுக்கு பொருந்தக்கூடிய எந்தவித சட்டப்பூர்வ அறிவிப்புகளும் அடங்கும். “கூடுதல் விதிமுறைகள்” என இவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. சேவைக்கு கூடுதல் விதிமுறைகள் பொருந்தும் இடங்களில், அந்த சேவைக்குள்ளாகவோ அல்லது அந்த சேவையைப் பயன்படுத்தும்போதோ அவற்றை நீங்கள் படிக்க முடியும்.</p>
<p>1.4 கூடுதல் விதிமுறைகளும் அதனுடன் இணைந்த உலகளாவிய விதிமுறைகளும் சேர்ந்து, உங்களுக்கும் Google க்கும் இடையே சேவைகளின் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை உருவாக்குகிறது. இவற்றை நேரம் செலவழித்து நீங்கள் படிப்பது மிகவும் அவசியம். ஒட்டுமொத்தமாக, இந்த சட்டப்பூர்வ ஒப்பந்தம் இதன் பின்னர் "விதிமுறைகள்" என்றழைக்கப்படும்.</p>
<p>1.5 கூடுதல் விதிமுறைகளில் உள்ளவற்றிற்கும், உலகளாவிய விதிமுறைகளில் உள்ளவற்றுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டால், குறிப்பிட்ட அந்த சேவையுடன் தொடர்புடைய கூடுதல் விதிமுறை முன்னிலை பெறும்.</p>
<p><strong>2. விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல்</strong></p>
<p>2.1 சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் முதலில் விதிமுறைகளுக்கு உடன்படுவது அவசியம். விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீங்கள் சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.</p>
<p>2.2 பின்வரும் முறைகளில் விதிமுறைகளை நீங்கள் ஏற்கலாம்:</p>
<p>(அ) எந்தவொரு சேவையின் பயனர் இடைமுகத்தில் Google மூலம் அளிக்கப்படும், விதிமுறைகளை ஏற்கிறேன் அல்லது உடன்படுகிறேன் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம்; அல்லது</p>
<p>(ஆ) சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம். இந்நிலையில், சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள் என Google கருதும் என புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><strong>3. விதிமுறைகளின் மொழி</strong></p>
<p>3.1 விதிமுறைகளின் ஆங்கில மொழிப்பதிப்பை மொழிபெயர்ப்பு செய்து Google உங்களுக்கு வழங்குகிறது, இது உங்கள் வசதிக்காகவே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கிறீர்கள் மேலும் Google உடனான உங்கள் உறவை விதிமுறையின் ஆங்கில மொழிப் பதிப்புகளே கட்டுப்படுத்தும்.</p>
<p>3.2 விதிமுறைகளின் ஆங்கிலப் பதிப்பிற்கும், அதன் மொழிபெயர்ப்பிற்கும் இடையே முரண்பாடு ஏற்படும்போது, ஆங்கில மொழி பதிப்பு முன்னிலை பெறும்.</p>
<p><strong>4. Google அளிக்கும் சேவைகளை வழங்குதல்</strong></p>
<p>4.1 உலகம் முழுவதும் துணைநிறுவனங்களும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ உட்பொருள்களை Google கொண்டுள்ளது (“துணை மற்றும் சார் நிறுவனங்கள்”). சில நேரங்களில் இந்த நிறுவனங்கள் Google சார்பாக உங்களுக்கு சேவைகளை வழங்கும். துணை மற்றும் சார் நிறுவனங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்கான உரிமை உடையவை என்பதை நீங்கள் அறிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>4.2 தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க, Google, தொடர்ந்து புதுமையைப் புகுத்திக்கொண்டிருக்கிறது. Google வழங்கும் சேவைகளின் அமைப்பு மற்றும் இயல்பானது, உங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் அளிக்கப்படாமல் காலத்துக்கேற்ப மாறக்கூடும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வதோடு அதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.</p>
<p>4.3 இந்த தொடர் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக, Google தனது சேவையை (அல்லது சேவைகளில் உள்ள ஏதேனும் ஒரு அம்சத்தை) வழங்குவதை (தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக) , உங்களிடம் தெரிவிக்காமல் Google எந்நேரத்திலும் நிறுத்திக் கொள்வது Google இன் தனிப்பட்ட அதிகாரத்திற்குட்பட்டது. நீங்கள் எந்த நேரத்திலும் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளலாம். சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளும் போது நீங்கள் குறிப்பாக Google இடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.</p>
<p>4.4 உங்கள் கணக்கிற்கான அணுகலை Google முடக்கினால், சேவைகள், உங்கள் கணக்கு விவரங்கள் அல்லது வேறு எந்த வகையான கோப்புகள், அல்லது உங்கள் கணக்கிலுள்ள வேறு எந்த வகையான உள்ளடக்கங்களையும் அணுக முடியாது என்பதை அறிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><strong>5. சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் விதம்</strong></p>
<p>5.1 சேவைகளை பின்வருவனவற்றால் அனுமதிக்கப்படும் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள், (அ) விதிமுறைகள் மற்றும், (ஆ) அந்தந்த அதிகார வரம்புகளுக்கு உட்பட்ட செல்லுபடியாகும் சட்டம், ஒழுங்கு அல்லது பொதுவாக ஏற்கப்பட்ட நடைமுறைகள் அல்லது வழிமுறைகள் (ஐக்கிய நாடுகள் அல்லது தொடர்புடைய மற்ற நாடுகள் ஆகியவற்றுக்கு அல்லது அவற்றிலிருந்து தரவு அல்லது மென்பொருள் ஏற்றுமதி தொடர்பான சட்டங்களையும் உள்ளடக்கியது).</p>
<p>5.2 சேவைகள் (அல்லது சேவைகளுடன் இணைந்துள்ள சர்வர்கள் அல்லது நெட்வொர்க்குகள்) ஆகியவற்றில் குறுக்கிடும் அல்லது ஆகியவற்றுக்கு தொல்லை தரக்கூடிய எந்த வகையான செயலிலும் ஈடுபட மாட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>5.3 Google ஆல் முறையாக தனியான ஒப்பந்தத்தின் மூலம் அனுமதிக்கப்பட்டிருந்தால் தவிர, எந்தவொரு நோக்கத்திற்காகவும் சேவைகளை மீளுருவாக்கம், நகலாக்கம், விற்பனை, வணிகம் அல்லது மறுவிற்பனை செய்ய மாட்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>5.4 விதிமுறைகள் மீறல்கள் அல்லது மீறல்களைச் சார்ந்து ஏற்படும் எந்த வகையான தொடர்விளைவுகள் (Google க்கு ஏற்படும் இழப்பு அல்லது நட்டம் ஆகியவற்றையும் சேர்த்து) ஆகியவற்றுக்கு நீங்கள் மட்டுமே (உங்களுக்கு அல்லது எந்த மூன்றாம் தரப்புக்கும் Google பொறுப்பாகாது) பொறுப்பாவீர்கள் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><strong>6. தனியுரிமை மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள்</strong></p>
<p>6.1 Google இன் தரவு பாதுகாப்பு நடைமுறைகளைப் பற்றி அறிய, Google இன் தனியுரிமைக் கொள்கையை பின்வரும் முகவரியில் காண்க http://www.google.com/privacy.html மற்றும் http://www.google.com/chrome/intl/en/privacy.html. நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை Google எவ்விதம் பராமரிக்கிறது என்பதையும், உங்கள் ரகசியத்தை எவ்விதம் பாதுகாக்கிறது என்பதையும் இந்தக் கொள்கை விவரிக்கிறது.</p>
<p>6.2 Google இன் தனியுரிமைக் கொள்கைகளுக்கு உட்பட்டு தரவைப் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><strong>7. சேவைகளில் உள்ள உள்ளடக்கங்கள்</strong></p>
<p>7.1 சேவையின் ஒரு பகுதியாக அல்லது சேவையின் மூலமாக நீங்கள் அணுகும் எல்லா தகவல்களும் (தரவு கோப்புகள், எழுதப்பட்ட உரைகள், கணினி மென்பொருள், இசை, ஒலிக்கோப்புகள் அல்லது மற்ற ஒலிகள், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது மற்ற படங்கள் போன்றவை) அவற்றை உருவாக்கிய நபரின் பொறுப்பிற்குரியது. இதன் பின் மேற்கூறிய விவரங்கள் "உள்ளடக்கம்" என குறிப்பிடப்படும்.</p>
<p>7.2 சேவைகளின் ஒரு பகுதியாக உங்களுக்கு வழங்கப்படும், சேவைகளிலுள்ள விளம்பரங்கள் மற்றும் சேவைகளுக்குள்ளே ஆதரிக்கப்படும் பிற உள்ளடக்கங்கள், அந்தந்த உள்ளடக்கங்களை Google க்கு வழங்கும் விளம்பரதாரர்கள் அல்லது வழங்குபவர்கள் (அல்லது அவர்கள் சார்பில் வழங்கும் நபர்களால் அல்லது நிறுவனங்களால்) அறிவுசார் சொத்துரிமையின் கீழ் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். இவ்வகை உள்ளடக்கங்களில் நீங்கள் மாற்றம், வாடகை, குத்தகை, விற்பனை, விநியோகம் அல்லது உள்ளடக்கங்களை சார்ந்து (முழுமையாக அல்லது பகுதியாக) சார்தயாரிப்புகள் உருவாக்குதல் ஆகியவற்றை தனியான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் Google அல்லது உள்ளடக்கத்தின் உரிமையாளர்களால் கேட்கப்பட்டிருந்தால் தவிர செய்யக் கூடாது.</p>
<p>7.3 எந்தவொரு சேவையிலிருந்தும் எந்த ஒரு அல்லது அனைத்து உள்ளடக்கத்தையும் முன்-திரையிடுவதற்கு, மதிப்பாய்வு செய்வதற்கு, கொடியிடுவதற்கு, திருத்துவதற்கு அல்லது நிராகரிப்பதற்கான உரிமை Google க்கு உள்ளது (ஆனால் அதற்கான நிர்பந்தம் இல்லை). சில சேவைகளில், வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கு Google கருவிகளை வழங்கலாம். இந்த கருவிகள் பாதுகாப்பான தேடல் முன்னுரிமை அமைப்புகளையும் சேர்த்தது ( http://www.google.com/help/customize.html#safe ஐக் காண்க). கூடுதலாக, ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கம் என நீங்கள் அறியும் தகவலுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் சேவைகள் மற்றும் மென்பொருள் ஆகியவை வணிகரீதியில் கிடைக்கின்றன.</p>
<p>7.4 சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தவறான, நாகரீகமற்ற, அல்லது ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கத்தை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம் என்பதை புரிந்துகொண்டு, சொந்த விருப்பத்தின் பேரில்தான் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.</p>
<p>7.5 நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது உருவாக்கும், பகிர்ந்து கொள்ளும், அல்லது வெளிப்படுத்தும் உள்ளடக்கம் மற்றும் உங்கள் செயல்களினால் உருவாகும் தொடர் விளைவுகள் ஆகியவற்றுக்கு நீங்கள் மட்டுமே (Google க்கு ஏற்படும் இழப்பு அல்லது நட்டம் ஆகியவற்றையும் சேர்த்து) பொறுப்பாவீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><strong>8. உரிமையுடைமை உரிமைகள்</strong></p>
<p>8.1 எல்லா சட்டரீதியான உரிமைகள், தலைப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான விவரங்கள், சேவைகளைச் சார்ந்த அறிவுசார் சொத்துரிமைகள் (அவ்வுரிமைகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது இல்லாவிட்டால் மற்றும் உலகின் எந்த இடத்திலும் இவ்வுரிமைகள் இருந்தாலும்) ஆகியவை Google (அல்லது Google இன் உரிமதாரர்கள்)க்கு சொந்தமானது என்பதை நீங்கள் அறிந்து ஒப்புக் கொள்கிறீர்கள்.</p>
<p>8.2 Google இன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, Google இன் வணிகப்பெயர்கள், வணிக முத்திரைகள், சேவை முத்திரைகள், லோகோக்கள், களப்பெயர்கள் அல்லது மற்ற தனிப்பட்ட தயாரிப்பு அம்சங்களைப் பயன்படுத்த விதிமுறைகளின் எந்த பகுதியும் உங்களுக்கு உரிமை அளிக்கவில்லை.</p>
<p>8.3 Google உங்களுக்கு இந்த தயாரிப்பு அம்சங்களில் ஏதேனும் ஒன்றைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கான தனிப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை வழங்கியிருந்தால், அந்த ஒப்பந்தம், பொருந்தக்கூடிய விதிமுறை மற்றும் Google இன் தயாரிப்பு அம்ச பயன்பாட்டு வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு இணங்கி அது போன்ற அம்சங்களைப் பயன்படுத்துவீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள். http://www.google.com/permissions/guidelines.html (அல்லது வெவ்வேறு நேரங்களில் இந்த நோக்கத்திற்காக Google வழங்கும் பிற URL முகவரிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்) முகவரியில் நீங்கள் இந்த வழிகாட்டுதல்களைக் காணலாம்.</p>
<p>8.4 இந்த விதிமுறைகளின் கீழ் உள்ள சேவைகளில் நீங்கள் சமர்பிக்கும், அஞ்சல் செய்யும், பரிமாறும் அல்லது வெளியிடும் எந்த உள்ளடக்கத்திலும், தலைப்பு மற்றும் உங்களிடமிருந்து (அல்லது உங்கள் உரிமதாரரிடமிருந்து) விவரங்கள், அந்த உள்ளடக்கங்கள் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் (அவ்வுரிமைகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது இல்லாவிட்டால் மற்றும் உலகின் எந்த இடத்திலும் இவ்வுரிமைகள் இருந்தாலும்) ஆகியவற்றை Google வைத்திருக்கவில்லை என்பதை அறிந்துள்ளதுடன் ஒப்புக்கொள்கிறது. Google உடன் எழுத்துப்பூர்வமாக ஒப்புகொள்ளும் வரை, நீங்களே அந்த உரிமைகளைப் பாதுகாக்கவும் தொடரவும் வேண்டும், உங்கள் சார்பாக Google ஏதும் செய்ய இயலாது.</p>
<p>8.5 சேவைகளில் இணைக்கப்பட்டுள்ள அல்லது சேவைகளில் உள்ள எந்த உரிமையுடைமை உரிமை அறிக்கைகளை (பதிப்புரிமை மற்றும் வணிகமுத்திரை அறிக்கைகள் ஆகியவற்றையும் சேர்த்து) நீங்கள் நீக்கவோ, மறைக்கவோ, அல்லது மாற்றவோ மாட்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>8.6 Google ஆல் வெளிப்படையாக எழுத்துபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தால் தவிர நீங்கள் எந்த ஒரு நிறுவனம் அல்லது அமைப்பின் வணிகமுத்திரை, சேவை முத்திரை, வணிகப் பெயர், லோகோ ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது, அவ்வாறு பயன்படுத்துதல் அவ்வகை முத்திரைகள், பெயர்கள் அல்லது லோகோக்களின் உரிமையாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயனரைப் பற்றிய குழப்பத்தை விளைவிக்கலாம்.</p>
<p>தனிப்பட்ட மற்றும் வர்த்தகரீதியற்ற பயன்பாட்டிற்காக AVC காப்புரிமை போர்ட்ஃபோலியோ உரிமத்தின் கீழ் இந்த தயாரிப்பிற்கு உரிமம் தரப்பட்டுள்ளது. ஒரு நுகர்வோர் (i) AVC தரநிலைக்கு (“AVC VIDEO”) ஏற்ப ஒரு வீடியோவை குறியாக்கம் செய்ய மற்றும்/அல்லது (ii) தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியற்ற செயல்பாட்டில் ஈடுப்பட்டிருக்கும் ஒரு நபர் குறியாக்கம் செய்த AVC வீடியோவை குறிநீக்கம் செய்ய மற்றும்/அல்லது AVC வீடியோவை வழங்க உரிமம் பெற்றுள்ள வீடியோ கூட்டாளரிடமிருந்து உரிமம் பெறுதல் போன்றவற்றுக்காக இதைப் பயன்படுத்தலாம். வேறு எந்தப் பயன்பாட்டிற்காகவும் உரிமம் வழங்கப்படவில்லை அல்லது வேறு எந்தப் பயன்பாட்டிற்காகவும் மறைமுகமாக உரிமம் வழங்கப்படவில்லை. கூடுதல் விவரங்களை MPEG LA, L.L.C. இலிருந்து பெறப்படலாம். HTTP://WWW.MPEGLA.COM ஐக் காண்க. </p>
<p><strong>9. Google வழங்கும் உரிமம்</strong></p>
<p>9.1 Google ஆல் வழங்கப்படும் சேவைகளின் ஒரு பகுதியாக Google வழங்கிய மென்பொருளைப் (இதன் பின்னர் "மென்பொருள்" என்று குறிப்பிடப்படுகிறது) பயன்படுத்துவதற்கு Google உங்களுக்கு தனிப்பட்ட, உலகளாவிய, ராயல்டி அற்ற, ஒதுக்கம் செய்யமுடியாத மற்றும் விசேஷத்தன்மை எதுவுமற்ற உரிமத்தை அளிக்கிறது. இந்த உரிமமானது, விதிமுறைக்குட்பட்டு சேவைகளின் நன்மைகளைப் பயன்படுத்தி மகிழ்வதற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.</p>
<p>9.2 பிரிவு 1.2 இல் விவரிக்கப்பட்டபடி, Google ஆல் எழுத்துப்பூர்வமாக கூறப்பட்டால் அல்லது வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டால் அல்லது சட்டத்தால் கேட்கப்பட்டால் தவிர நீங்கள் பிரதி, மாற்றம், சார்தயாரிப்பு, மீளுருவாக்கம், மறுதொகுப்பு அல்லது மென்பொருளின் மூலக்குறியீட்டை முழுமையாக அல்லது பகுதியாக எடுத்தல் போன்றவற்றை செய்யக் (அல்லது மற்றவர்கள் செய்ய அனுமதிக்க) கூடாது.</p>
<p>9.3 பிரிவு 1.2 இல் விவரிக்கப்பட்டபடி, Google உங்களுக்கு தனிப்பட்ட எழுத்துபூர்வ அனுமதி அளித்தால் தவிர, மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான உங்களுடைய உரிமைகளை ஒப்படைக்கவோ (அல்லது துணை உரிமம் அளிக்கவோ), மென்பொருளைப் பயன்படுத்துவது தொடர்பான பாதுகாப்பு உரிமத்தை அளிக்கவோ அல்லது உங்கள் உரிமங்களின் பகுதிகளையோ அல்லது முழுமையாகவோ மாற்றம் செய்யவோக் கூடாது.</p>
<p><strong>10. நீங்கள் வழங்கும் உள்ளடக்க உரிமம்</strong></p>
<p>10.1 சேவையில் அல்லது சேவையைப் பயன்படுத்தி நீங்கள் சமர்ப்பிக்கும், காட்சிப்படுத்தும் அல்லது இடுகையிடும் உள்ளடக்கத்தில் உங்களுக்கு முன்பே உள்ள பதிப்புரிமை அல்லது பிற உரிமைகள் உங்களுக்கு தொடர்ந்து இருக்கும்.</p>
<p><strong>11. மென்பொருள் புதுப்பிப்புகள்</strong></p>
<p>11.1 நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் அதன் புதுப்பித்தல்களை அவ்வப்போது Google இடமிருந்து தானாகவே பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளக்கூடும். இந்த புதுப்பித்தல்கள் சேவைகளை மேம்படுத்த, மெருகூட்ட மற்றும் இன்னும் முன்னேற்ற வடிவமைக்கப்பட்டவை, இவை சில பிழை திருத்தங்கள், மெருகூட்டப்பட்ட செயல்பாடுகள், புதிய மென்பொருள் தொகுதிகள் மற்றும் முற்றிலும் புதிய பதிப்புகள் ஆகிய வடிவிலும் வழங்கப்படலாம். சேவைகளின் உங்கள் பயன்பாட்டின் ஒரு பகுதியாக இத்தகைய புதுப்பித்தல்களை பெற (மற்றும் Google அவற்றை உங்களுக்கு வழங்க அனுமதிக்க) நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><strong>12. 13. Google உடனான உங்கள் உறவை முடித்துக்கொள்ளுதல்</strong></p>
<p>12.1 பின் வரும் முறைகளில் உறவை நீங்கள் அல்லது Google முறிக்கும் வரை இந்த விதிமுறைகள் தொடரும்.</p>
<p>12.2 உங்களுடனான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் பின்வரும் காரணங்களின் கீழ் Google முறித்து கொள்ளலாம்:</p>
<p>(அ) நீங்கள் இந்த விதிமுறைகளின் எந்த உட்பிரிவையும் மீறும் போது (அல்லது உங்கள் செயல்பாடு வெளிப்படையாக நீங்கள் விதிமுறைகளை பின்பற்றவில்லை அல்லது உங்களால் பின்பற்ற முடியாது எனக்காட்டினால்); அல்லது</p>
<p>(ஆ) சட்டத்தினால் Google அவ்வாறு செய்ய நேர்ந்தால் (எ.கா., உங்களுக்கு அளிக்கப்படும் சேவை சட்டத்திற்கு புறம்பானது அல்லது அவ்வாறு ஆகும்போது) அல்லது</p>
<p>(இ) Google உடன் இணைந்து சேவைகளை வழங்கும் கூட்டாளர் நிறுவனம் தனது உறவை உங்களுடன் முறித்து கொள்ளும்போது அல்லது தனது சேவைகளை உங்களுக்கு வழங்குவதை நிறுத்திக்கொள்ளும்போது; அல்லது</p>
<p>(ஈ) நீங்கள் இருக்கும் நாடு அல்லது நீங்கள் சேவைகளைப் பெறும் குறிப்பிட்ட நாட்டிலுள்ள பயனர்களுக்கான சேவைகளை Google மாற்றிக் கொள்ளும் போது அல்லது வழங்குவதை நிறுத்தி கொள்ளும்போது; அல்லது</p>
<p>(உ) Google உங்களுக்கு வழங்கும் சேவை, Google ஐப் பொறுத்தவரை, வணிகரீதியான சாத்தியங்கள் இனி ஒருபோதும் இல்லை.</p>
<p>12.3 இந்த பகுதியில் உள்ள எதுவும் Google இன் உரிமைகளை விதிமுறைகளின் பிரிவு 4 இன் கீழ் பாதிக்காது.</p>
<p>12.4 இந்த விதிமுறை முடிவுக்கு வரும் போது, Google மற்றும் நீங்கள் பயன்படுத்தியவற்றின் சட்ட உரிமைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புகள் (அல்லது வெவ்வேறு நேரங்களில் சேர்ந்த விதிமுறைகள் பயன்பாட்டில் வந்த நாள் முதல்) அல்லது வெளிப்படுத்தப்பட்டவை அனைத்தும் அப்படியே எந்த ஒரு வரையறையும் இன்றி தொடரும், அவை இந்த முடிவினால் பாதிக்கப்பாடாது, பத்தி 19.7 இல் வழங்கப்பட்டுள்ள உட்பிரிவுகள் இவ்வகையான உரிமைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புகள் மீது தொடரும்.</p>
<p><strong>13. 14. காப்புறுதிகளுக்குள் அடங்காதவை</strong></p>
<p>13.1 சட்டப்பூர்வமாக விலக்களிக்கப்படாத அல்லது பொருந்தும் சட்டத்தால் வரம்பிடப்பட்ட இழப்புகளுக்கான GOOGLE இன் காப்புறுதி அல்லது பொறுப்பிற்கு, இந்த விதிமுறைகள் பிரிவுகள் 13 மற்றும் 14 களையும் சேர்த்து விலக்களிக்கப்படாது. சில உத்திரவாதங்கள் அல்லது நிபந்தனைகள் அல்லது வரம்புகள் அல்லது, அசட்டையால், ஒப்பந்த மீறலால் அல்லது உணர்த்தப்பட்ட விதிமுறைகளால் அல்லது தற்செயலாக நிகழ்ந்த அல்லது ஒன்றின் விளைவாக ஏற்படும் இழப்புகள் போன்றவற்றால் உண்டான நஷ்டங்கள், இழப்புகளுக்குரிய பொறுப்புகள் என்பவற்றை விலக்குவதற்கு சில அதிகார எல்லைகள் அனுமதிக்காது. இதேபோல், உங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட சட்டப்பூர்வ வரம்புகள் மட்டும் செயல்படுத்தப்படும், அத்துடன் சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச எல்லையின்படி எங்கள் பொறுப்பு வரம்பிடப்படும்.</p>
<p>13.2 சேவைகளை உங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் சேவைகள் "அப்படியே" மற்றும் “கிடைக்கப்பெறும்” நிலையிலேயே வழங்கப்படுகின்றன என்பதையும் வெளிப்படையாக புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>13.3 குறிப்பாக GOOGLE, அதன் உதவி பெறும் நிறுவனங்கள், கூட்டுநிறுவனங்கள் மற்றும் அதன் உரிமதாரர்கள் பின்வரும் வகைகளில் உங்களுக்கு காப்புறுதி வழங்கவோ அல்லது வெளிப்படுத்தவோ இல்லை:</p>
<p>(அ) சேவையின் பயன்பாடு உங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும்,</p>
<p>(ஆ) நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது தடங்கலின்றியும், நேரந்தவறாமலும், பாதுகாப்பாகவும், அல்லது பிழையின்றியும் இருக்கும்,</p>
<p>(இ) நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தி பெறும் எந்த தகவலும் துல்லியமாகவும் அல்லது நம்பகமானதாகவும் இருக்கும், மற்றும்</p>
<p>(ஈ) சேவைகளின் பகுதிகளாக உங்களுக்கு வழங்கப்படும் மென்பொருள்களின் செயல்பாடு அல்லது செயல்படும் விதம் ஆகியவற்றில் ஏற்படும் குறைகள் சரி செய்யப்படும்.</p>
<p>13.4 சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கும் எந்த ஒரு தகவலும் அல்லது பெறும் தகவலும் உங்களுடைய சொந்த விருப்பம் மற்றும் பொறுப்பிற்குரியது மேலும் இது போன்றவற்றைப் பதிவிறக்குவதால், உங்கள் கணினி அல்லது சாதனத்தின் செயலிழப்பு அல்லது தரவு இழப்பு போன்றவை ஏற்படுமானால் அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள்.</p>
<p>13.5 சேவைகளின் மூலமாக GOOGLE இடமிருந்து பெறப்படும் வாய்மொழியான அல்லது எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் அல்லது தகவல்கள் விதிமுறையில் வெளிப்படையாக கூறப்படாத எந்த காப்புறுதியையும் வழங்கவில்லை.</p>
<p>13.6 எல்லா வகையான, வெளிப்படையான அல்லது மறைமுக உத்திரவாதங்கள் மற்றும் நிபந்தனைகளை GOOGLE தெள்ளத்தெளிவாகக் கைத்துறக்கிறது. இதில், வர்த்தகத்தன்மைக்கான, குறிப்பிட்ட நோக்கத்துக்கு உரியதன்மை, மறைமுக காப்புறுதிகள், நிபந்தனைகள் மற்றும் மீறாமை ஆகியவையும் உள்ளடங்கும்.</p>
<p><strong>14. பொறுப்புகளின் வரம்பு</strong></p>
<p>14.1 மேலே உள்ள பத்தி, 13.1 இல் கூறப்பட்டுள்ள அனைத்திற்கும் உட்பட்டு, GOOGLE, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமதாரர்கள் பின்வருவனவற்றுக்கு பொறுப்பாக மாட்டார்கள் என்பதை நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள்:</p>
<p>(அ) எந்த வகையான நேரடியான, மறைமுகமான, நிகழ்வு சார்ந்த, தொடர் விளைவுகள் அல்லது உங்களுக்கு ஏற்படும் தவறான இழப்புகள், எந்த பொறுப்பாதல் தத்துவத்தின் கீழும் நேரிடும் எந்தவகையான இழப்புகள் ஆகியவை. இவற்றுடன் எந்த வகையான இலாபமிழப்பு (நேரடியாக அல்லது மறைமுகமாக பெறப்பட்டவை), நற்பெயர் அல்லது வணிக பெருமை இழப்பு, எந்த தரவு இழப்பு, மாற்று பொருள்களை அல்லது சேவைகளைப் பெறுதலுக்கான விலை அல்லது பிற தவிர்க்க முடியாத இழப்புகள்;</p>
<p>(ஆ) பின்வரும் காரணங்களினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவையும் சேர்த்து (ஆனால் அவை மட்டுமின்றி) உங்களால் ஏற்படும் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்கள்:</p>
<p>(I) சேவைகளில் தோன்றும் விளம்பரங்களின் ஸ்பான்சர்கள் அல்லது விளம்பரதாரர்களுடனான உங்கள் உறவு அல்லது பரிமாற்றம் சார்ந்து, அல்லது விளம்பரங்களின் முழுமை, துல்லியம் அல்லது இருப்பு சார்ந்து நீங்கள் பெறும் நம்பிக்கை;</p>
<p>(II) சேவைகளுக்கு GOOGLE செய்யும் எந்தவிதமான மாற்றங்கள் அல்லது நிரந்தரமான அல்லது தற்காலிகமான சேவை (அல்லது சேவைக்குள்ளிருக்கும் ஏதேனும் அம்சங்களின்) வழங்கல் நிறுத்தம்;</p>
<p>(III) சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது சேவைகளின் மூலம் நிர்வகிக்கப்படும் அல்லது பரிமாற்றப்படும் எந்த உள்ளடக்கம் அல்லது தொடர்புத் தரவுகளின் நீக்கம், சிதைவு அல்லது சேமிக்க முடியாமல் போகுதல்;</p>
<p>(IV) நீங்கள் GOOGLE க்கு சரியான கணக்கு தகவல்களை வழங்க தவறுவது;</p>
<p>(V) உங்கள் கடவுச்சொல் அல்லது மற்ற கணக்கு தகவல்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தவறுதல்;</p>
<p>14.2 மேலே 14.1 -வது பத்தியில் உங்களுக்கு அளிக்கப்பட்ட GOOGLE பொறுப்பின் மீதான வரம்புகள் யாவும், முன்பே Google மூலம் அறிவுறுத்தப்பட்டாலும் அல்லது அறிவுறுத்தப்படவில்லை என்றாலும் அல்லது ஏதேனும் இழப்புகள் ஏற்படும் சூழல் உருவாகும்போது பொருந்தும்.</p>
<p><strong>15. பதிப்புரிமை மற்றும் வர்த்தகக் குறியீட்டு கொள்கைகள்</strong></p>
<p>15.1 சர்வதேச அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை (ஐக்கிய நாடுகளின் டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமை சட்டத்தையும் சேர்த்து) பின்பற்றாத சந்தேகத்துக்குரிய பதிப்புரிமை மீறல் தொடர்பான அறிக்கைகளுக்கு பதிலளிப்பது மேலும் மீண்டும் மீண்டும் இத்தகைய மீறலைச் செய்பவர்களின் கணக்கை முடிப்பது Google இன் கொள்கை ஆகும். Google கொள்கை தொடர்பான விவரங்கள் இங்கு உள்ளன: http://www.google.com/dmca.html.</p>
<p>15.2 Google விளம்பர வணிகத்தைச் சார்ந்து வணிக முத்திரை குற்றச்சாட்டு நடைமுறைகளை இயக்கி வருகிறது, இதன் தகவல்களை இங்கு காணலாம்:http://www.google.com/tm_complaint.html.</p>
<p><strong>16. விளம்பரங்கள்</strong></p>
<p>16.1 விளம்பரப்படுத்தல் வருமானத்தின் மூலம் சில சேவைகள் ஆதரிக்கப்படுகின்றன மேலும் விளம்பரங்கள் மற்றும் தர உயர்வுகளின் மூலமாகவும் அவை காண்பிக்கப்படக்கூடும். சேவைகளில் சேமிக்கப்பட்டிருக்கக்கூடிய அல்லது பிற தகவலின் மூலம் எழுப்பப்பட்ட கேள்விகளில் சேமிக்கப்பட்டுள்ள தகவலின் உள்ளடக்கத்தை மையமாகக் கொண்டே இந்த விளம்பரங்கள் இருக்கக்கூடும்.</p>
<p>16.2 சேவைகளில் Google இன் விளம்பரங்களின் முறை, வடிவம் மற்றும் அளவு உங்களுக்கு தெரிவிக்கப்படாமலே மாற்றப்படலாம்.</p>
<p>16.3 Google அதனுடைய சேவைகளை அணுக மற்றும் பயன்படுத்த உங்களுக்கு உரிமை வழங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, Google இது போன்ற விளம்பரங்களை சேவைகளில் வெளியிட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><strong>17. பிற உள்ளடக்கங்கள்</strong></p>
<p>17.1 மற்ற வலைத்தளங்கள் அல்லது உள்ளடக்கங்கள் அல்லது தகவல்களுக்கான மிகை இணைப்புகளை சேவைகள் கொண்டிருக்கக்கூடும். Google அல்லாத மற்ற நிறுவனங்கள் அல்லது நபர்கள் வழங்கும் எந்தவகையான வலைத்தளங்கள் அல்லது தகவல்கள் மீது Google க்கு எந்தவித அதிகாரமும் இல்லை.</p>
<p>17.2 இது போன்ற வெளிப்புற வலைத்தளங்கள் அல்லது ஆதாரங்கள் ஆகியவை அணுகக் கிடைப்பதற்கு Google எவ்வகையிலும் பொறுப்பேற்காது என்பதையும், இவ்வகை வலைத் தளங்கள் அல்லது ஆதாரங்கள் ஆகியவற்றில் உள்ள அல்லது ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் விளம்பரங்கள், தயாரிப்புகள் அல்லது மற்றவைக்கு எவ்வித ஆதரவையும் Google வழங்கவில்லை என்பதையும் நீங்கள் அறிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>17.3 அவ்வகையான வெளித்தளங்கள் அல்லது தகவல் ஆதாரங்கள் ஆகியவற்றினால் நீங்கள் பெறக்கூடிய எவ்வகை இழப்பு அல்லது குறைபாடுக்கும் Google பொறுப்பாகாது என்பதையும், இவ்வகை வலைத்தளங்கள் அல்லது தகவல் ஆதாரங்கள் ஆகியவற்றில் உள்ள அல்லது ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் விளம்பரங்கள், தயாரிப்புகள் அல்லது மற்றவையின் முழுமை, துல்லியம் அல்லது இருப்பு ஆகியவற்றின் மீது நீங்கள் வைக்கும் எவ்வகை நம்பிக்கையின் காரணமாக நீங்கள் பெறக்கூடிய எவ்வகை இழப்பு அல்லது குறைபாடுக்கும் Google பொறுப்பாகாது என்பதையும் நீங்கள் அறிந்து அதனை ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><strong>18. விதிமுறையில் மாற்றங்கள்</strong></p>
<p>18.1 உலகளாவிய விதிமுறைகள் அல்லது கூடுதல் விதிமுறைகளில் அவ்வப்போது Google மாற்றங்களை செய்யலாம். இந்த மாற்றங்கள் செய்யப்படும்போது, http://www.google.com/chrome/intl/en/eula_text.html இல் வழங்கப்பட்டுள்ள உலகளாவிய விதிமுறைகளின் புதிய நகலை உருவாக்கும், புதிய கூடுதல் விதிமுறைகள் ஏதேனும் சேர்க்கப்பட்டால், அவை தொடர்பான சேவைகளில் அல்லது சேவைகளின் மூலமாக உங்களுக்குக் கிடைக்கும்.</p>
<p>18.2 உலகளாவிய விதிமுறைகள் அல்லது கூடுதல் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட தேதிக்குப் பின்னர் நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால், புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய விதிமுறைகள் அல்லது கூடுதல் விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டு பயன்படுத்துவதாக Google கருதும் என்பதை நீங்கள் புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><strong>19. 19. பொது சட்ட விதிமுறைகள்</strong></p>
<p>19.1 சில நேரங்களில் சேவைகளைப் பயன்படுத்தும்போது (பயன்படுத்துவதால், அல்லது சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக) வேறு நபர் அல்லது நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படும் சேவையைப் பயன்படுத்தவோ மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது பொருட்களை வாங்கவோ நேரிடலாம். இவ்வகை வெளி சேவைகளை, மென்பொருள்களை அல்லது பொருட்களைப் பயன்படுத்துவது உங்களுக்கும், தொடர்புடைய நிறுவனம் அல்லது நபருக்குமான தனியான விதிமுறைகள் மூலம் கையாளப்படலாம். அவ்வாறான நிலையில், உங்களுக்கும் மற்ற தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்குமான சட்டப்பூர்வ உறவை விதிமுறைகள் பாதிக்காது.</p>
<p>19.2 இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Google க்கும் இடையே முழுமையான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை அமைக்கிறது மற்றும் உங்களின் சேவைகள் பயன்பாட்டை (தனியான ஒப்பந்தத்தின் கீழ் Google உங்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளை தவிர்த்து) நிர்வகிக்கிறது. மேலும் உங்களுக்கும் Google க்கும் இடையே சேவைகள் தொடர்பாக முன்னர் செய்யப்பட்ட எந்தவகை ஒப்பந்தத்தையும் இது பதிலீடு செய்கிறது.</p>
<p>19.3 விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பான அறிக்கைகளை உங்களுக்கு, மின்னஞ்சல் மூலமாக, சாதாரண அஞ்சல் அல்லது சேவைகளில் வெளியிடுதல் மூலமாக Google வழங்கலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>19.4 Google எந்தவகையிலாவது விதிமுறைகளில் (அல்லது பொருந்தும் எந்த சட்டவிதிகளின் கீழும் Google இலாபமடைந்தால்) கூறப்பட்டுள்ளவற்றை, எந்த உரிமை அல்லது தீர்வுகளில் நடைமுறைப்படுத்த அல்லது பின்பற்ற தவறினாலும் Google இன் உரிமைகளின் முறையான அனுமதியாக அதனை எடுத்து கொள்ளக்கூடாது மேலும் அவ்வகை தீர்வுகள் அல்லது உரிமைகள் தொடர்ந்து Google இடம்தான் இருக்கும்.</p>
<p>19.5 இந்த விதிமுறை, அதன் உட்பிரிவுகள், விதிகள் தொடர்பாக எவ்வகை சட்ட அமைப்பும் முடிவெடுக்கக்கூடுமேயானால் அது செல்லாது. பின்னர் அவ்வகையிலான உட்பிரிவு மற்றவைகளைப் பாதிக்காதவாறு அகற்றப்படும். மீதியுள்ள விதிமுறையின் உட்பிரிவுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் மற்றும் பின்பற்றத்தக்கதாகவும் இருக்கும்.</p>
<p>19.6 Google தலைமையில் இயங்கும் கூட்டு நிறுவனங்களின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த விதிமுறையால் நன்மையடையும் மூன்றாம் தரப்பினராக இருப்பர் என்பதையும் விதிமுறைகளில் உள்ள, அந்த பிற நிறுவனங்களுக்கு (அல்லது அவர்கள் சார்பானவர்களுக்கு) நன்மை தரக்கூடிய அம்சங்கள் எதனையும் நேரடியாக செயல்படுத்தவும் பின்பற்றவும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்பதையும் நீங்கள் ஒப்புக்கொண்டு ஏற்கிறீர்கள். இவற்றைத் தவிர, விதிமுறைகளுக்கு வேறு எவரும் அல்லது எந்த நிறுவனமும் நன்மையடக்கூடிய மூன்றாம் தரப்பினராக இருக்கமாட்டார்கள்.</p>
<p>19.7 விதிமுறைகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் அமைந்த உங்களுக்கும் Google க்குமான உறவு, சட்ட உட்பிரிவுகளின் முரண்பாடுகளை சாராமல் கலிஃபோர்னியா மாகாணத்து சட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. விதிமுறைகளில் வரக்கூடிய எந்தவகையான சட்டச்சிக்கல்களையும், கலிஃபோர்னியாவின் சாண்டா க்ளாராவில் உள்ள நீதிமன்றங்களில் சமர்பிக்க நீங்களும் Google உம் சம்மதிக்கிறீர்கள். இவற்றைத் தவிர, சட்டப்பூர்வ உதவிகளைப் (அல்லது இதற்கு சமமான உடனடி சட்டத்தீர்வுக்கு) பெற, பயன்படுத்த, எந்த அதிகார எல்லையிலும் Google அனுமதிக்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.</p>
<p><strong>20. Google Chrome க்கான நீட்டிப்புகளுக்கான கூடுதல் விதிமுறைகள்</strong></p>
<p>20.1 Google Chrome இன் உங்கள் நகலில் நீங்கள் நீட்டிப்புகளை நிறுவினால் மட்டுமே இந்த விதிமுறைகள் உங்களுக்கு பொருந்தும். நீட்டிப்புகள் என்பவை, Google அல்லது மூன்றாம் தரப்புகளால் உருவாக்கப்படும் சிறிய மென்பொருள் நிரல்களாகும். இவை Google Chrome இன் செயல்திறனை மாற்றியமைக்கும் அல்லது மேம்படுத்தும். உங்கள் தனிப்பட்டத் தரவை படிக்க மற்றும் திருத்துவதற்கான திறன் உள்ளிட்ட அல்லது வழக்கமான வலைப்பக்கங்களை விட உங்கள் உலாவி அல்லது உங்கள் கணினி போன்றவற்றை அணுகுவதற்கு நீட்டிப்புகள் அதிக முன்னுரிமைகள் கொண்டதாக இருக்கலாம்.</p>
<p>20.2 தயாரிப்புகளுக்குத் தேவையான புதுப்பித்தல்களுக்காக, Google Chrome ஆனது தொலைநிலை சேவையகங்களை (Google அல்லது பிற மூன்றாம் தரப்புகளால் வழங்கப்படுபவை) அடிக்கடி சரிபார்க்கும். இதில் பிழைத் திருத்தங்கள் அல்லது மேம்பட்ட செயல்திறனும் அடங்கும் ஆனால் இவை மட்டுமே அல்ல. இம்மாதிரியான புதுப்பிப்புகள், உங்களுக்கு எந்தவகையிலும் தெரிவிக்கப்படாமல் தானாகவே கோரப்படும், பதிவிறக்கப்படும் மற்றும் நிறுவப்படும்.</p>
<p>20.3 Google டெவலப்பர் விதிமுறைகள் அல்லது பிற சட்ட ஒப்பந்தங்கள், சட்டங்கள், ஒழுங்குகள் அல்லது கொள்கைகளை ஒரு நீட்டிப்பு மீறுகிறதா என்பதை Google அடிக்கடி கண்டுபிடிக்கும். இம்மாதிரியான நீட்டிப்புகளின் பட்டியலை Google Chrome அடிக்கடி Google சேவையகங்களிலிருந்து பதிவிறக்கும். இந்த நீட்டிப்புகளைப் பயனர்களின் கணினிகளிலிருந்து தொலைநிலையிலிருந்தே முடக்கவும் அகற்றவும் Google உரிமை பெற்றுள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். </p>
<br>
<h2>பிற்சேர்க்கை A</h2>
<p>Adobe Systems Incorporated மற்றும் Adobe Software Ireland Limited (ஒட்டுமொத்தமாக “Adobe”) ஆகியவற்றால் வழங்கப்பட்ட ஒன்று அல்லது அதிகமான உறுப்புகளை Google Chrome கொண்டிருக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் Google (“Adobe மென்பொருள்”) ஆல் வழங்கப்பட்ட Adobe மென்பொருள், பின்வரும் கூடுதல் விதிமுறைகளுக்கு உட்பட்டது (“Adobe விதிமுறைகள்”). நீங்கள் Adobe மென்பொருளை பெறுகிறீர்கள், இனிமேல் "துணை உரிமதாரர்" என்று குறிப்பிடப்படுவீர்கள்.</p>
<p>1. உரிம வரம்புகள்.</p>
<p>(a) Flash பிளேயர், பதிப்பு 10.x ஆகியவை ஒரு உலாவி செருகு-நிரலாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு வலைப்பக்கத்தில் உள்ளடக்கத்தை இயக்குவதற்காக ஒரு உலாவி செருகு-நிரல் தவிர, எதுவாகவும் இந்த Adobe மென்பொருளைப் பயன்பாட்டிற்காக துணை உரிமதாரர் மாற்ற அல்லது விநியோகிக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, உலாவிக்கு வெளியில் பயன்பாடுகளுடன் இயங்கும் இடைநடவடிக்கையை அனுமதிக்கும் பொருட்டு, துணைஉரிமதாரர் இந்த Adobe மென்பொருளை மாற்றமாட்டார் (எ.கா. தனித்துநிற்கும் பயன்பாடுகள், விட்ஜெட்டுகள், சாதன இடைமுகம் போன்றவை). </p>
<p>(b) Flash பிளேயர், பதிப்பு 10.x இன் எந்த API களையும் ஒரு தனித்து நிற்கும் பயன்பாடாக வலைப்பக்கத்திலிருந்து ப்ளேபேக் உள்ளடக்கத்திற்கு பயன்படுத்தக்கூடிய அதுபோன்ற நீட்டிப்புகளை அனுமதிக்கும் வழியில் செருகுநிரல் இடைமுகத்தின் மூலம் துணை உரிமதாரர் வெளிப்படுத்தக்கூடாது. </p>
<p>(c) Adobe DRM தவிர டிஜிட்டல் உரிமைகள் நிர்வாக நெறிமுறைகள் அல்லது அமைப்புகளைப் பயன்படுத்தும் ஏதேனும் PDF அல்லது EPUB ஆவணங்களை வழங்க Chrome ரீடர் மென்பொருள் பயன்படுத்தக் கூடாது. </p>
<p>(d) Chrome ரீடர் மென்பொருளில் Adobe DRM அனைத்து Adobe DRM பாதுகாக்கப்பட்ட PDF மற்றும் EPUB ஆவணங்களுக்காகவும் அவசியம் இயக்கப்பட வேண்டும். </p>
<p>(e) Chrome ரீடர் மென்பொருள் தொழில்நுட்பக் குறிப்பீடுகளால் விரிவாக அனுமதிக்கப்பட்டது தவிர Adobe மென்பொருளில் Adobe ஆல் வழங்கப்பட்ட ஏதாவது திறன்களை முடக்கக்கூடாது, இதில் PDF மற்றும் EPUB வடிவமைப்புகள் மற்றும் Adobe DRM ஆகியவை அடங்கும் ஆனால் அவை மட்டுமே அல்ல.</p>
<p>2. மின்னனு பரிமாற்றம். வலைத் தளம், இணையம், ஒரு அகப்பிணையம் அல்லது அதேபோன்ற தொழில்நுட்பம் ("மின்னணு மாற்றங்கள்") ஆகியவற்றிலிருந்து Adobe மென்பொருளைப் பதிவிறக்க துணை உரிமதாரர் அனுமதிக்கலாம், துணை உரிமதாரரால் மேற்கொள்ளப்படும் CD-ROM, DVD-ROM அல்லது மற்ற சேகரிப்பு மீடியா மற்றும் மின்னணு மாற்றங்கள் உள்ளடங்கிய மென்பொருளின் எந்த விநியோகமும், வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டிருந்தால், அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டைத் தடுப்பதற்கான ஏற்றுக்கொள்ளத்தக்க பாதுகாப்பு அம்சங்களுக்கு உட்பட்டது என்று துணை உரிமதாரர் ஒப்புக்கொள்கிறார். மின்னணு மாற்றங்கள் தொடர்பாக இங்கே அங்கீகரிக்கப்பட்ட, துணை உரிமதாரர், Adobe ஆல் அமைக்கப்பட்ட ஏதாவது பொருத்தமான பயன்பாட்டு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட மற்றும்/அல்லது துணைஉரிமதாரர் தயாரிப்பின் இறுதிப் பயனர்களுக்கு விநியோகக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறார்.</p>
<p>3. இறுதிப்பயனர் உரிம ஒப்பந்தம் மற்றும் விநியோகிப்பு விதிமுறைகள்.</p>
<p>(a) பின்வரும் குறைந்தபட்ச விதிமுறைகளின் ("இறுதிப் பயனர் உரிமம்") படி துணை உரிமதாரர் மற்றும் அதன் வழங்குநர்கள் சார்பாக, செயலாக்கத்தக்க இறுதிப் பயனர் உரிம ஒப்பந்தத்தின்படி, இறுதிப் பயனர்களுக்கு Adobe மென்பொருள் வழங்கப்படுவதை துணை உரிமதாரர் உறுதிப்படுத்த வேண்டும்: (i) பகிர்வது மற்றும் நகலெடுப்பது மீதான தடை, (ii) திருத்தம் செய்வது மற்றும் வழிப்பொருட்கள், (iii) மறுதொகுப்பு, வெளியீட்டிலிருந்து மூலத்தைக் கண்டறிய முற்படுவது, மறு உருவாக்கம் செய்வது, மனிதர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்வண்ணம் Adobe மென்பொருளின் ஆக்கத்தை குறைப்பது, (iv) துணை உரிமதாரர் மற்றும் அதன் உரிமதாரர்களால் துணை உரிமதாரர் தயாரிப்பின் (பிரிவு 8-இல் கூறியுள்ளபடி) ஒதுக்கீட்டை குறிப்பது, (v) மறைமுக, சிறப்பு, எதிர்பாராத, தண்டனை நடவடிக்கையாக, விளைவை ஏற்படுத்தக்கூடிய சேதாரங்களை கைதுறப்பது (vi) தொழிற்துறை சார்ந்த நிலையான கைதுறப்புகள் மற்றும் வரையறைகளான பொருந்தக்கூடிய சட்டப்படியான பொறுப்புகள், சட்டத்தால் அனுமதிக்கப்படும் முழுமையான வரம்பு வரை இவை பொருந்தும்.</p>
<p>(b) துணை உரிமதாரர், Adobe மென்பொருள் என்பது நடைமுறைப்படுத்தப்பட்ட விநியோக உரிம ஒப்பந்தத்தின் கீழ் Adobe மென்பொருள் விநியோகிக்கப்பட்டது என்று உறுதிசெய்கிறார், துணை உரிமதாரர் மற்றும் அவரது வழங்குநர்கள் ஆகியோருக்கு சாதகமாக Adobe விதிமுறைகளாக Adobe இன் பாதுகாக்கப்பட்ட ஒன்றாக விதிமுறைகளைக் கொண்டுள்ளது.</p>
<p>4. ஓப்பன்சோர்ஸ் துணை உரிமதாரர், ஏதாவது மூன்றாம் தரப்புக்கு, ஏதாவது உரிமைகளை அல்லது காக்கும் தன்மைகளை, திறந்த மூல உரிமம் அல்லது திட்டத்துக்கு உட்பட்ட அறிவுசார் சொத்து Adobe இன் அறிவுசார் சொத்துரிமை அல்லது உரிமைஉடைமை உரிமைகள் ஆகியவற்றை வழங்க நேரடியாக அல்லது மறைமுகமாக அல்லது வழங்க உத்தேசிக்கவோ அனுமதி வழங்கவில்லை, ஒரு பயன்பாட்டு நிபந்தனையாக ஒரு தேவைக்கு விளக்கப்பட்டிருக்கக்கூடிய, மாற்றம் மற்றும்\அல்லது பகிர்வு, Adobe மென்பொருள்: (i) மூலக் குறியீட்டு வடிவத்தில் வழங்கப்பட அல்லது விநியோகிக்கப்பட அனுமதிக்கவில்லை; (ii) வழிபொருள் பணிகளை உருவாக்கும் நோக்கத்திற்காக உரிமம் வழங்கப்படவில்லை அல்லது (iii) எந்தக் கட்டணமுமில்லாமல் மறுவிநியோகம் செய்யப்படல் ஆகியவற்றை அனுமதிப்பதாக புரிந்து கொள்ளப்படக் கூடாது. தெளிவுப்படுத்தல் காரணங்களுக்காக, மேலே கூறப்பட்ட கட்டுப்பாடு விநியோகிப்பதிலிருந்து துணை உரிமதாரரை விலக்காது மற்றும் துணை உரிமதாரர், கட்டணமில்லாமல், Google மென்பொருளுடன், Adobe மென்பொருளைக் கட்டமைக்கப்பட்டதாக விநியோகிக்கும்.</p>
<p>5. கூடுதல் விதிமுறைகள். துணை உரிமதாரருக்கு வழங்கப்பட்ட எந்த புதுப்பிப்பு, மேம்பாடு, Adobe மென்பொருளின் புதிய பதிப்புகள் (மொத்தமாக "புதுப்பிப்புகள்" என்று அழைக்கப்படுகின்றன) ஆகியவைத் தொடர்பாக, Adobe, மேம்பாடு மற்றும் எதிர்கால பதிப்புகளுக்கு முழுவதுமாக பொருந்தக்கூடிய கூடுதல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தேவைகளை மற்றும் இதுபோன்ற மேம்பாட்டை அனைத்து உரிமதாரர்களிலும் விதிக்கவும் Adobe உரிமை கொண்டுள்ளது. அந்தமாதிரியான கூடுதல் விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளை துணை உரிமதாரர் ஏற்கவில்லையெனில், அதுபோன்ற மேம்பாடு மற்றும் Adobe மென்பொருளுக்கு சம்பந்தப்பட்ட துணை உரிமதாரரின் உரிம உரிமைகள் ஆகியவற்றைப் பெறமாட்டார் மேலும் துணை உரிமதாரருக்கு இத்தகைய கூடுதல் விதிமுறைகள் கிடைக்கப்பெற்ற 90வது நாளில் அது தானாகவே நீக்கப்படும்.</p>
<p>6. உரிமையுடைமை உரிமை அறிவிப்புகள். துணை உரிமதாரர், பதிப்புரிமை அறிக்கைகள், வர்த்தக அடையாளங்கள், லோகோக்கள் அல்லது தொடர்புடைய அறிக்கைகளோ, Adobe மென்பொருள் அல்லது துணைப் பொருட்களில் தோன்றும் Adobe இன் மற்ற சொத்துரிமை அறிக்கைகள் (மற்றும் அதன் உரிமவழங்குநர்கள், எவராவது) ஆகியவற்றை நீக்குவதற்கு தங்கள் விநியோகிப்பாளர்களைக் கோர அல்லது அனுமதிக்கக்கூடாது. </p>
<p>7. தொழில்நுட்ப தேவைகள். துணை உரிமதாரர் மற்றும் அதன் விநியோகிப்பாளர்கள், Adobe மென்பொருளை விநியோகிக்கலாம் மற்றும்/அல்லது (i) http://www.adobe.com/mobile/licensees இல் (அல்லது இதனை தொடர்ந்து வெளியிடப்படும் வலைத்தளத்தில்) வெளியிடப்பட்ட தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் பொருந்தும் சாதனங்களில் மேம்படுத்தலாம் மேலும் (ii) கீழே விவரிக்கப்பட்டபடி Adobe நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும்.</p>
<p>8. சரிபார்ப்பும் புதுப்பிப்பும். Google ஆல் Adobe சரிபார்ப்பதற்காக தொடர்பு கொள்ளப்படும் சாதன சரிபார்ப்பு விலக்க தேர்வளவைகளுடன் பொருந்தாத, துணை உரிமதாரர் துணை உரிமம் பெற்ற Adobe மென்பொருளைக் கொண்ட ஒவ்வொரு தயாரிப்பையும் Adobe க்கு சமர்பிக்க வேண்டும் (மற்றும் அதனுடைய தொடர்ந்த பதிப்புகளையும்) மற்றும்/அல்லது மேம்பாடுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் (“துணை உரிமதாரர் தயாரிப்பு”). Adobe http://flashmobile.adobe.com/ முகவரியில் வரையறுத்துள்ள தற்போதைய விதிமுறைகளின்படி, துணை உரிமதாரர் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு சமர்பிப்பிற்கும் சரிபார்ப்பு தொகுப்புகளைப் பெறுவதற்கு, துணை உரிமதாரர் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம். சரிபார்ப்பு செயல்முறையில் தேர்ச்சியடையாத துணை உரிமதாரர் தயாரிப்பை விநியோகிக்கக்கூடாது. Adobe நிறுவனத்தால், http://flashmobile.adobe.com/ என்ற முகவரியில் வரையறுக்கப்பட்டுள்ள தற்போதைய நடைமுறைகளுக்கு இணங்க, சரிபார்த்தல் செயல்முறைகள் பூர்த்தி செய்யப்படும்(“சரிபார்த்தல்”).</p>
<p>9. சுயவிவரங்களும் சாதன மையமும். துணை உரிம தயாரிப்புகள் பற்றிய சில சுயவிவர தகவல்களைத் துணை உரிமதாரர் உள்ளிடுமாறு கேட்கப்படுவார். இது சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாகவோ அல்லது வேறு ஏதேனும் செயல்முறையின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம். துணை உரிமதாரர் இந்தத் தகவல்களை Adobe க்கு வழங்குவார். Adobe (i) இந்த சுயவிவரத் தகவல்களை துணை உரிம தயாரிப்பைச் சரிபார்க்க தேவையான அளவிற்கு மட்டும் பயன்படுத்தும் (அந்த தயாரிப்பு சரிபார்த்தலுக்கு உட்பட்டதாக இருந்தால்), மேலும் (ii) அந்தத் தகவல்களை https://devices.adobe.com/partnerportal/ இல் விவரிக்கப்பட்ட “Adobe சாதன நுண்ணறிவு அமைப்பில்” காண்பிக்கும். மேலும், இதனை Adobe இன் தொகுத்தல் மற்றும் உருவாக்குதல் கருவிகள் மற்றும் சேவைகளின் வழியாக வெளியிடப்படும். இதனால் டெவலப்பர்கள் மற்றும் இறுதி பயனர்கள் எவ்வாறு உள்ளடக்கம் அல்லது பயன்பாடுகள் துணை உரிம தயாரிப்புகளில் காண்பிக்கப்படும் என்பதை அறிந்து கொள்வார்கள் (எ.கா. குறிப்பிட்ட சில தொலைபேசிகளில் வீடியோ படங்கள் எவ்வாறு காண்பிக்கப்படும் என்று அறிதல்).</p>
<p>10. ஏற்றுமதி. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப தரவு ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் என்று துணை உரிமதாரர் ஒப்புக்கொள்கிறார். இதில் Adobe மென்பொருளும் அடங்கியிருக்கலாம். துணை உரிமதாரர்கள் Adobe மென்பொருளை, பொருத்தமான அமெரிக்க மற்றும் அயல்நாட்டு அரசாங்க ஒப்புதல்கள் இன்றி ஏற்றுமதி அல்லது மறு ஏற்றுமதி செய்யக்கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறார்.</p>
<p>11. தொழில்நுட்ப பயன்படுத்தலுக்கான விதிமுறைகள்.</p>
<p>(a) பொருத்தமான அனுமதிகளை அல்லது ஒப்பந்தங்களைப் பொருத்தமான நபர்களிடமிருந்து பெறுவது தவிர, துணை உரிமதாரர்கள், Adobe மென்பொருளை mp3 ஆடியோ மட்டுமான (.mp3) தரவை கணினி அல்லாத சாதனங்களில் (எ.கா., மொபைல் தொலைபேசி அல்லது செட்-டாப் பாக்ஸ்) பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்த அனுமதிக்கவோ கூடாது, Adobe மென்பொருளைத் தவிர வேறு எந்த தயாரிப்பும், Adobe மென்பொருளில் உள்ள mp3 குறியாக்கிகள் அல்லது குறிநீக்கிகளை அணுகவோ பயன்படுத்தவோ கூடாது. வீடியோ, படம் மற்றும் பிற தரவுகளைக் கொண்ட swf அல்லது flv கோப்பில் உள்ள MP3 தரவை குறியாக்கம் அல்லது குறிநீக்கம் செய்ய Adobe மென்பொருள் பயன்படுத்தப்படலாம். இந்த பிரிவில் தடைகள் என்பதன் கீழ் விவரிக்கப்பட்டவாறு கணினி அல்லாத சாதனங்களில் Adobe மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு, MP3 தொழில்நுட்பம் தொடர்பான அறிவுசார் உரிமைகளைக் கொண்டுள்ள மூன்றாம் தரப்பினருக்கு உரிமம் பெறுதல் ராயல்டி கட்டணங்கள் அல்லது பிற கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கலாம் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். இம்மாதிரியான பயன்பாட்டிற்காக மூன்றாம் தரப்பினருக்கு, Adobe அல்லது துணை உரிமதாரர் ஆகிய எவருமே எந்தவிதமான ராயல்டிகள் அல்லது பிற கட்டணங்களைச் செலுத்தவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். துணை உரிமதாரரின் பயன்பாட்டிற்கு, MP3 குறியாக்கம் அல்லது குறிநீக்கமானது தேவைப்படும் பட்சத்தில், பொருந்தக்கூடிய எந்த காப்புரிமை உரிமைகள் உள்பட, தேவையான அறிவுசார் சொத்துரிமை உரிமத்தைப் பெறுவதற்கு துணை உரிமதாரருக்கு பொறுப்பு உண்டு.</p>
<p>(b) துணை உரிமதாரர்கள் (i) On2 மூலக் குறியீட்டை (இங்கு மூலக்குறியீட்டின் ஒரு பகுதியாக தரப்பட்டுள்ளது) Adobe மென்பொருள் Flash வீடியோ கோப்பு வடிவமைப்பைக் (.flv அல்லது .f4v) குறிநீக்கம் செய்ய உதவுவதற்காக மற்றும் (ii) சோரன்ஸன் ஸ்பார்க் மூலக்குறியீட்டை (இங்கு மூலக்குறியீட்டின் ஒரு பகுதியாக தரப்பட்டுள்ளது) Adobe மென்பொருளின், பிழை திருத்தங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள் போன்றவற்றைச் செய்வதற்காகவோ பயன்படுத்த, நகலெடுக்க, மீளுருவாக்கம் செய்யவோ மாற்றவோக் கூடாது. Adobe மென்பொருளுடன் வழங்கப்பட்ட கோடெக்குகள் அனைத்தும், Adobe மென்பொருளின் ஒருங்கிணைந்த பகுதியாக மட்டுமே பயன்படுத்த மற்றும் பகிர முடியும் பிற Google பயன்பாடுகள் உள்பட அது பிற எந்த பயன்பாட்டினாலும் அணுக முடியாதபடி இருக்கும்.</p>
<p>(c) மூலக் குறியீடானது AAC கோடெக் மற்றும்/அல்லது HE-AAC கோடெக் (“AAC கோடெக்”) உடன் வழங்கப்படலாம். AAC கோடெக்கின் பயன்பாடு, AAC கோடெக் பயன்படுத்தப்படவிருக்கும் இறுதி தயாரிப்புகள், VIA உரிமம் பெறுதலின் மூலம் வழங்கப்படும், முறையான காப்புரிமை உரிமங்களைப் பெறும் கட்டுப்பாட்டை உள்ளடக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் துணை உரிமதாரர் அல்லது அதன் துணை உரிமதாரர்களுக்கு, AAC கோடெக்கிற்கு, காப்புரிமை உரிமையை Adobe வழங்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டு துணை உரிமதாரர் ஏற்கிறார்.</p>
<p>(d) மூலக் குறியீட்டில், AVC காப்புரிமை போர்ட்ஃபோலியோவின் கீழ் உரிமம் பெறப்பட்டிருக்கும், குறியீடுகளைக் கொண்டிருக்கக்கூடும். இவை தனிப்பட்ட வர்த்தக நோக்கற்ற பயன்பாட்டிற்காக பெறப்பட்டுள்ளன, இதைப் பயன்படுத்தி, (i) AVC தரநிலைகளுக்கு ("AVC VIDEO") ஏற்ப வீடியோவை குறியாக்கம் செய்ய மற்றும்/அல்லது (ii) தனிப்பட்ட வர்த்தக நோக்கற்ற செயல்பாட்டில் ஈடுப்பட்டுள்ள தனிநபரால் குறியாக்கம் செய்யப்பட்ட AVC வீடியோவை குறிநீக்கம் செய்ய மற்றும்/அல்லது AVC வீடியோவை வழங்குவதற்கு உரிமம் பெற்ற வீடியோ வழங்குநரிடமிருந்து பெற்ற வீடியோ கோப்பு ஆகியவற்றை குறிநீக்கம் செய்ய பயன்படுத்தப்படலாம். வேறு எந்தப் பயன்பாட்டிற்காகவும் உரிமம் வழங்கப்படவில்லை அல்லது வேறு எந்தப் பயன்பாட்டிற்காகவும் மறைமுகமாக உரிமம் வழங்கப்படவில்லை. கூடுதல் விவரங்களை MPEG LA, L.L.C இலிருந்து பெறலாம். http://www.mpegla.com ஐக் காண்க.</p>
<p>12. புதுப்பிப்பு. Adobe மென்பொருளை Google மென்பொருளாகத் தொகுக்கப்பட்ட Adobe மென்பொருள்களைக் (“துணைஉரிம தயாரிப்புகள்”) கொண்ட எல்லா துணை உரிம தயாரிப்புகளிலும் மேம்படுத்த Google அல்லது Adobe இன் எந்த முயற்சியையும் துணை உரிமதாரர் மீறிச்செல்லக் கூடாது.</p>
<p>13. கொடுக்கப்படும் அதிகாரம் மற்றும் உரிமையுடைமை அறிவிப்புகள். துணை உரிமதாரர், Adobe மென்பொருளைப் பொதுவாக கிடைக்கும் துணை உரிமதாரர் தயாரிப்பு விவரக்குறிப்புகளில் பட்டியலிடலாம் மற்றும் முறையான மென்பொருள் பிராண்டிங்கை (குறிப்பாக Adobe நிறுவனத்தின் லோகோவைத் தவிர்த்து) துணை உரிம தயாரிப்பு தொகுப்பாக்கல் அல்லது சந்தைப்படுத்தல் பொருட்களில், துணை உரிமதாரர் தயாரிப்பில் உள்ள பிற மூன்றாம் தரப்பு பொருட்களின் பிராண்டிங்குடன் இணக்கமான வகையில் சேர்க்கலாம்.</p>
<p>14. உத்திரவாதம் இன்மை. துணை உரிமதாரரின் பயன்பாட்டிற்கும் மற்றும் "உள்ளபடியே" மறு உருவாக்கம் செய்யவும் ADOBE மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது மேலும் அதன் பயன்பாடு அல்லது செயல்திறனுக்கு எந்த உத்தரவாதமும் ADOBE வழங்கவில்லை. ADOBE மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் பெறப்பட்ட செயல்பாடுகள் அல்லது முடிவுகள் ஆகியவற்றுக்கு ADOBE மற்றும் அதன் வழங்குநர்களால் காப்புறுதி வழங்கப்பட மாட்டாது. காப்புரிமை, நிபந்தனை, பிரதிநிதித்துவம் அல்லது விதிமுறை ஆகியவை துணை உரிமம் பெற்றவர் துணை உரிமதாரரின் அதிகார வரம்பிற்கு பொருந்தும் சட்டத்தால் விலக்கப்பட முடியாமல் அல்லது வரம்பிட முடியாமல் இருக்கலாம், இவற்றைத் தவிர, ADOBE மற்றும் அதன் வழங்குநர்கள் எந்த காப்புரிமைகள், நிபந்தனைகள், பிரதிநிதித்துவங்கள் அல்லது விதிமுறைகள் (சிறப்புச் சட்டம், பொதுச்சட்டம், தனிப்பயன், பயன்பாடு அல்லது) ஆகியவற்றை உருவாக்கமாட்டார்கள், இதில் மூன்றாம் தரப்பின் மீறலற்ற வரம்பிடப்படாமை, வணிகத்தன்மை, ஒருங்கிணைப்பு, திருப்தியான தரம் அல்லது ஏதாவது குறிப்பிட்ட நோக்கத்திற்கு தகுதியாய் இருத்தல் போன்றவை அடங்கும். ADOBE இன் சார்பாக ஏதாவது காப்புரிமை, வெளிப்படுத்தல் அல்லது உணர்த்துதல் ஆகியவற்றை துணை உரிமதாரர் செய்யக்கூடாது என்று துணை உரிமதாரர் ஒப்புக்கொள்கிறார்.</p>
<p>15. பொறுப்புகளின் வரம்பு. ADOBE மற்றும் அதன் வழங்குநர்கள் ஏதாவது சேதங்கள், உரிமை கோரல்கள் அல்லது செலவீனங்கள் என்னவானாலும் அல்லது ஏதாவது தொடர்ச்சிகளோ மறைமுகமாகவோ சம்பவ சேதங்களோ அல்லது ஏதாவது இழந்த லாபங்கள் அல்லது இழந்த சேமிப்புகள், ADOBE பிரதிநிதி இத்தகைய இழப்பு, சேதங்கள், உரிமைகோரல்கள் அல்லது செலவினங்கள் அல்லது ஏதாவது மூன்றாம் தரப்பால் மேற்கொள்ளப்படும் உரிமைகோரல்கள் ஆகியவற்றைக் குறித்து முன்னரே அறிவுறுத்தியிருந்தாலும் அவற்றுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் பொறுப்பானவர்களாக இருக்கமாட்டார்கள். இந்த வரம்புகள் மற்றும் விலக்குகள் ஆகியவை துணை உரிமதாரரின் அதிகாரவரம்பில் பொருந்தும் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வரம்பு வரை அனுமதிக்கப்படுகின்றன. ADOBE இன் ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதைப்போலவே அதன் வழங்குநர்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் அல்லது இதனுடன் சம்பந்தப்பட்ட நம்பகத்தன்மை (1,000 அமெரிக்க) டாலர்கள் வரை வரம்பிடப்பட்டிருக்க வேண்டும். Adobe இன் அலட்சியம் அல்லது ஏமாற்றுதல் குற்றத்திற்காக மரணம் அல்லது தனிப்பட்ட காயம் ஆகிய சம்பவங்களின்போது, துணை உரிமதாரருக்கு Adobe இன் பொறுப்பை வரம்பிடுவதற்கான எந்தவொன்றும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. Adobe அதன் வழங்குநர்கள் சார்பாக, இந்த ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டதைப் போன்ற வரம்பிடும் கடமைகள், உத்தரவாதங்கள் மேலும் பொறுப்பு, பிற நோக்கங்களைக் கைத்துறக்கும், விலக்கும் நோக்கத்திற்காக செயல்படுகிறது.</p>
<p>16. உள்ளடக்க பாதுகாப்பு விதிமுறைகள்</p>
<p>(a) வரையறைகள்.</p>
<p>"இணக்கமும் வலுவான விதிகளும்" என்பது http://www.adobe.com/mobile/licensees அல்லது தொடர்ச்சியாக வழங்கப்படும் வலைத்தளத்தில் அமைந்துள்ள Adobe மென்பொருளுக்கான இணக்கம் மற்றும் வலிமை ஆகியவற்றின் விதிகளை வரையறுக்கும் ஆவணமாகும்.</p>
<p>"உள்ளடக்க பாதுகாப்பு செயல்பாடுகள்" என்பது இணக்கம் மற்றும் வலிமை தொடர்பான விதிகளுடன் உள்ள இணக்கத்தை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட மற்றும் ப்ளேபேக்கைத் தடுக்க, நகலெடுக்க, மாற்றம் செய்ய, மறுவிநியோகம் செய்ய அல்லது இதுபோன்ற டிஜிட்டல் உள்ளடக்கத்தின் உரிமையாளர்கள் அல்லது அதன் உரிமம்பெற்ற விநியோகிப்பாளர்கள் ஆகியோரால் அந்த செயல்கள் அங்கீகரிக்கப்படாதபோது Adobe மென்பொருளின் பயனர்கள் அவற்றைப் பயன்படுத்துவதைத் தடுக்க, விநியோகிக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கம் சம்பந்தமான மற்ற செயல்கள் ஆகியவற்றுக்கான Adobe மென்பொருளின் அம்சங்களாகும்.</p>
<p>"உள்ளடக்கப் பாதுகாப்புக் குறியீடு" என்பது குறிப்பிட்ட உள்ளடக்கப் பாதுகாப்பு செயல்பாடுகளை இயக்குவதற்காக Adobe மென்பொருளின் குறிப்பிட்ட ஒதுக்கப்பட்ட பதிப்புகளுக்குள் உள்ள குறியீடாகும்.</p>
<p>"விசை" என்பது டிஜிட்டல் உள்ளடக்கத்தை குறிநீக்கம் செய்வதில் பயன்படுத்தப்படும் Adobe மென்பொருளில் உள்ள ஒரு கிரிப்டோகிராஃபிக் மதிப்பாகும்.</p>
<p>(b) உரிமக் கட்டுப்பாடுகள். Adobe மென்பொருள் சம்பந்தமாக உரிமங்களைப் பயன்படுத்தும் துணை உரிமதாரரின் உரிமையானது பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளுக்கு உட்பட்டது. Adobe மென்பொருள் சம்பந்தமாக துணை உரிமதாரர் மீது அதே நீட்டிப்பில் விதிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளுடன் துணை உரிமதாரரின் வாடிக்கையாளர்கள் இணக்கத்துடன் நடந்துகொள்வததைத் துணை உரிமதாரர் உறுதி செய்வார்; இந்தக் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளை துணை உரிமதாரரின் வாடிக்கையாளர்கள் பின்பற்றுவதில் ஏதாவது தோல்வி ஏற்பட்டால், அது துணை உரிமதாரரால் ஒழுங்குமுறை மீறல் என்று கருதப்பட வேண்டும்.</p>
<p>b.1. துணை உரிமதாரர் மற்றும் வாடிக்கையாளர்கள் மட்டுமே, மேலே விவரிக்கப்பட்ட Adobe விதிமுறைகளின்படி நடந்த சரிபார்த்தல் செயல்பாட்டின் போது துணை உரிமதாரரால் உறுதிசெய்யப்பட்ட விதத்தில் வலுவான மற்றும் இணக்கமான விதிகளைக் கையாளும் வகையில் Adobe மென்பொருளை விநியோகிக்கலாம்.</p>
<p>b.2. (i) Adobe மென்பொருளின் பயனர்களால் அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டிற்காக டிஜிட்டல் உள்ளடக்கத்தை குறியேற்றம் அல்லது குறிநீக்கம் செய்யப் பயன்படும் Adobe மென்பொருள் அல்லது ஏதாவது தொடர்புடைய Adobe மென்பொருளின் உள்ளடக்கப் பாதுகாப்பு செயல்பாடுகளை அல்லது (ii) Adobe மென்பொருளின் பயனர்களால் அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டிற்காக டிஜிட்டல் உள்ளடக்கத்தை குறியேற்றம் அல்லது குறிநீக்கம் செய்யப் பயன்படும் Adobe மென்பொருள் அல்லது ஏதாவது Adobe மென்பொருளின் உள்ளடக்கப் பாதுகாப்புச் செயல்பாடுகளை ஏமாற்ற வடிவமைக்கப்பட்டுள்ள மேம்பாடு மற்றும் விநியோகத் தயாரிப்புகள் ஆகியவற்றின் மூலம் துணை உரிமதாரர் ஏமாற்றக்கூடாது.</p>
<p>(c) Adobe இன் ரகசிய தகவலாக விசைகள் இங்கே தீர்மானிக்கப்பட்டுள்ளன மற்றும் விசைகள் சம்பந்தமாகவும், Adobe இன் மூலக் குறியீடு கையாள்தல் செயல்முறை (கோரிக்கையின்படி Adobe ஆல் வழங்கப்படும்) சார்பாகவும் துணை உரிமதாரர் பொறுப்பேற்பார்.</p>
<p>(d) சட்டப்பூர்வ நிவாரணம். இந்த ஒப்பந்தத்தை மீறுவதானது, Adobe மென்பொருளின் உள்ளடக்கப் பாதுகாப்பு செயல்பாடுகளின் மீறலை உண்டாக்கலாம், இதனால் Adobe மற்றும் உள்ளடக்கப் பாதுகாப்பு செயல்பாடுகளை சார்ந்திருக்கும் டிஜிட்டல் உள்ளடக்க உரிமையாளர்களின் நலன்களுக்கு தனித்த மற்றும் நீடிக்கும் தீங்கு உண்டாகலாம், மற்றும் இதுபோன்ற தீங்குகளுக்கு கண்காணிப்பு சேதங்கள், இழப்பீடு செய்ய போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் என்பதைத் துணை உரிமதாரர் ஏற்றுக்கொள்கிறார். ஆகையால், Adobe இத்தகைய மீறலால் ஏற்படும் தீங்கைத் தடுக்க அல்லது வரம்பிட, சட்டப்பூர்வ நிவாரணத்தை நாடுவதற்கு, கூடுதலாக கண்காணிப்பு சேதங்களுக்கும், உரிமையளிக்கப்பட்டிருக்கும் என்பதைத் துணை உரிமதாரர் ஒப்புக்கொள்கிறார்.</p>
<p>17. நன்மையடையும் மூன்றாம் தரப்பினர். Adobe Systems Incorporated மற்றும் Adobe Software Ireland Limited ஆகியவையே Google துணை உரிமதாரர்களுடன் Adobe மென்பொருளின் அடிப்படையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூன்றாம் தரப்பு நலனடைபவர்கள் ஆவர், இதில் Adobe விதிமுறைகளும் அடங்கும், ஆனால் அவை மட்டுமே அல்ல. துணை உரிமதாரர் Google உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு எந்தவகையிலும் முரண்படாமல் Google துணை உரிமதாரரின் அடையாளத்தை Adobe க்கு தெரிவிக்கலாம் மேலும் துணை உரிமதாரர் Adobe விதிமுறைகளும் உள்ளடங்கிய ஒரு உரிம ஒப்பந்தத்தின் கீழ் Google உடன் இணைந்துள்ளார் என்பதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். துணை உரிமதாரர்கள் அவருடைய ஒவ்வொரு உரிமதாரர்களிடமிருந்தும், அவர்கள் Adobe மென்பொருள்களை விநியோகிக்க உரிமம் தரப்பட்டிருந்தால் அவர்களுடன் தனிப்பட்ட ஒப்பந்தத்தைக் கொண்டிருக்க வேண்டும், இந்த ஒப்பந்தத்தில் Adobe விதிமுறைகளும் அடங்கும்.</p>
<p>ஏப்ரல் 12, 2010</p>
</body>
</html>